உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இலங்கைக்கு எதிரான போட்டியில் 357 ரன்களைக் குவித்தது இந்திய அணி.
“பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தித் தாக்குதல்”- ஆறு பேர் கைது!
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (நவ.02) பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெற்ற உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதின. இதில், முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்களை எடுத்தது.
இந்திய அணி தரப்பில் சுப்மன் கில் 92 ரன்களையும், விராட் கோலி 88 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களையும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் தில்ஷன் மதுஷனகா 5 விக்கெட்டுகளையும், துஷ்மந்தா சமீரா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர், 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி விளையாடி வருகிறது. உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, உலகக்கோப்பையில் அரையிறுதிச் சுற்று முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.