மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும், இந்திய கிரிக்கெட் அணியை பி.சி.சி.ஐ. (BCCI) அறிவித்துள்ளது.
ஏன் எனக்கு இப்படி பண்ணீங்க… தங்கலான் படம் குறித்து நடிகை மாளவிகா மோகனன்!
ஒருநாள் போட்டி, டெஸ்ட், டி20 தொடர்களில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 3, 6, 8, 12, 13 ஆகிய தேதிகளில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணியை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்றழைக்கப்படும் பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியில் யஷஸ்வி ஜெய்ஷ்வால், திலக் வர்மா ஆகிய இருவரும் முதன்முறையாக அணிக்கு தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர். சூர்யகுமார் அணிக்கு துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சித்தார்த் நடிப்பில் வெளியான ‘டக்கர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்!
இந்திய கிரிக்கெட் அணியில், இஷான் கிஷன், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், குல்தீப் யாதவ், சாஹல், ரவி பிஷ்ணோய், உம்ரான் மாலிக், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.