தொடர் மழைக் காரணமாக இந்தியாvsகனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் டாஸ் போடாமலேயே ரத்து செய்யப்பட்டது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோத உள்ளன. இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 8’ சுற்றில் பலப்பரீட்சை நடத்த வேண்டும். அதன் பிறகு ஜூன் 24ம் தேதி அரையிறுதி ஆட்டங்களும், ஜூன் 29ம் தேதி பிரிட்ஜ்டவுனில் பைனலும் நடக்க உள்ளன.
இந்நிலையில் நேற்று நடைபெற இருந்த ஆட்டமானது 33வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன. இதில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும் கனடா அணியானது சட் பின் சவர் தலைமையிலும் மோத இருந்தன. இந்த ஆட்டமானது அமெரிக்காவில் உள்ள செண்ட்ரல் பிரவ்வர்டு ரெஜினல் பார்க் மைதானத்தில் நடைபெற இருந்தது. இந்த ஆட்டமானது இடைவிடாத மழைக் காரணாமாக ஆட்டமானது டாஸ் போடாமலேயே நிறுத்திக் வைக்கப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இந்திய அணியை பொறுத்தவரை ஏற்கனவே ”சூப்பர் 8” சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் இந்த முடிவானது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.