Homeசெய்திகள்விளையாட்டுஇந்திய அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? - கனடா அணியுடன் இன்று மோதல்!

இந்திய அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? – கனடா அணியுடன் இன்று மோதல்!

-

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 33வது லீக் ஆட்டத்தில் இந்தியாvsகனடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோத உள்ளன. இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 8’ சுற்றில் பலப்பரீட்சை நடத்த வேண்டும். அதன் பிறகு ஜூன் 24ம் தேதி அரையிறுதி ஆட்டங்களும், ஜூன் 29ம் தேதி பிரிட்ஜ்டவுனில் பைனலும் நடக்க உள்ளன.

இந்நிலையில் இன்று நடைபெறும் 33வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும் கனடா அணியானது சட் பின் சவர் தலைமையிலும் களம் காண்கின்றன. இந்த ஆட்டமானது அமெரிக்காவில் உள்ள செண்ட்ரல் பிரவ்வர்டு ரெஜினல் பார்க் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கனவே தொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றி வாகை சூடிய இந்திய அணி தங்களது நான்கவது வெற்றீ பயணத்தை தொடருமா என ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

MUST READ