Homeசெய்திகள்விளையாட்டுஇங்கிலாந்து அணி பேட்டிங்கில் திணறல் - இந்திய அணி சிறப்பான பந்துவீச்சு

இங்கிலாந்து அணி பேட்டிங்கில் திணறல் – இந்திய அணி சிறப்பான பந்துவீச்சு

-

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது மற்றும் மூன்றாவது நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையெயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியினர் மதிய உணவு நேர இடைவேளைக்குள் 112 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து திணறி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணியில் இரண்டு மாற்று வீரர்களாக மார்க்வுட், ரெஹான் அகமது, நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக ஆலி ராபின்சன், சோயிப் பஷிர் அணியில் சேர்க்கப்பட்டனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் அணியில் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். இப்போட்டியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்குட்பட்டது என்பதால் இரு அணிகளுக்கும் முக்கிய போட்டியாக கருதப்படுகிறது.

MUST READ