Homeசெய்திகள்விளையாட்டுஜெய்ஷ்வால் அபார ஆட்டம் - வலுவான நிலையில் இந்தியா!

ஜெய்ஷ்வால் அபார ஆட்டம் – வலுவான நிலையில் இந்தியா!

-

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இப்போட்டியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு உட்பட்டது என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் இன்று முதல் தேதி முதல்29 தேதி வரை நடைபெறவுள்ளது. முதலாவது டெஸ்ட் ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி தொடக்கம் முதல் இறுதி வரை இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியாக 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் மற்றும் ஜடேஜா தலை 3 விக்கெட்டுகளூம், அக்‌ஷர் பட்டேல் மற்றும் பும்ரா தலை 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து இந்திய அணி முதலாவது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் யஷ்வி ஜெய்ஷ்வால் ஆகியோர் களமிறங்கினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஷ்வால் அரைசதம் கடந்தார். மறுமுனையில் விளையாடிக்கொண்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்கள் எடுத்திருந்த போது ஜேக் லீச் பந்துவீச்சில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் ஆனார். இதனை தொடர்ந்து சுப்மன் கில் களமிறங்கினார். ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஷ்வால் 76 ரன்களுடனும், சுப்மன் கில் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

MUST READ