Homeசெய்திகள்விளையாட்டு3வது வெற்றியை பெறப்போகும் அணி எது? - இந்தியாvsஅமெரிக்கா அணிகள் இன்று மோதல்!

3வது வெற்றியை பெறப்போகும் அணி எது? – இந்தியாvsஅமெரிக்கா அணிகள் இன்று மோதல்!

-

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 25வது லீக் ஆட்டத்தில் இந்தியாvsஅமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் உலக கோப்பை டி20 தொடர் கடந்த 2-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோத உள்ளன. இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 8’ சுற்றில் பலப்பரீட்சை நடத்த வேண்டும். அதன் பிறகு ஜூன் 24ம் தேதி அரையிறுதி ஆட்டங்களும், ஜூன் 29ம் தேதி பிரிட்ஜ்டவுனில் பைனலும் நடக்க உள்ளன. இப்போட்டிக்கான முதலாவது லீக் ஆட்டம் கடந்த 2-ந் தேதி தொடங்கியது.

இந்நிலையில் இன்று நடைபெறும் 25வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையிலும் அமெரிக்கா அணியானது மோனக் பட்டேல் தலைமையில் களம் காண்கின்றன. இந்த ஆட்டமானது அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கின் நாசாவ் கவுண்டி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.இந்த உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் இதுவரை 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் மூன்றாவது வெற்றியை பெற இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

MUST READ