16- வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (மே 29) இரவு 07.30 மணிக்கு இசை நிகழ்சசி மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் வண்ணமயமாகத் தொடங்கியது.
தேர்தல் வியூகம் குறித்து ஜூன் 12- ஆம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனை!
இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து, பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களை எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக, சாய் சுதர்சன் 96 ரன்களையும், சஹா 54 ரன்களையும், சுப்மன் கில் 39 ரன்களையும் எடுத்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில், தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும், மதீஷா பதிரானா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
இந்த நிலையில், போட்டிக்கு நடுவே மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி மீண்டும் தொடங்குவதில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றவுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் பேட்டிங் செய்தனர். மூன்று பந்துகளை எதிர்கொண்ட ருதுராஜ் கெய்க்வாட் 4 ரன்களை எடுத்தார். இன்னும் 211 ரன்களை சென்னை அணி எடுக்க வேண்டியிருந்த நிலையில், மீண்டும் மழை பெய்ததால், இறுதிப் போட்டி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், மழை நின்ற பின் டக்அவுட் லூயிஸ் முறையில், 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, நள்ளிரவு 12.10 மணியளவில் போட்டி மீண்டும் தொடங்கியது. கடினமான இலக்கை முன்வைத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடியது.
தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய தெலுங்கு தேசம் கட்சி!
கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழலில், சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளை அடித்து, அணியை வெற்றி பெற செய்து, கோப்பையை கேப்டன் தோனிக்கு சமர்ப்பித்தார் நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா.
இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக ஐ.பி.எல். கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. சென்னை அணியின் வெற்றியை, நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், மற்ற ஐ.பி.எல். அணி நிர்வாகங்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அனைத்து சூழலுக்கும் திட்டம் வகுக்கும் தோனியின் படை ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மழை காரணமாக ஐ.பி.எல். இறுதிப் போட்டி நிறுத்தம்!
நடப்பு ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக ரூபாய் 20 கோடி வழங்கப்பட்டது. இதனை பி.சி.சி.ஐ.யின் செயலாளர் ஜெய் ஷா வழங்கிப் பாராட்டினார்.