
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மே 28) இரவு 07.30 மணிக்கு 16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும், நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றனர்.
தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
சென்னை, குஜராத் அணிகள் ஐ.பி.எல். வரலாற்றில் நான்கு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்று முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால், ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்லும்.
அதே நேரத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றால், கோப்பையைத் தக்க வைக்கும். கோப்பையை வெல்லும் அணிக்கு 20 கோடி ரூபாயும், இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 13 கோடி ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்படவிருக்கிறது.
சம பலம் கொண்ட இரு அணிகளும் மோதுவதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அமைச்சர் உதயநிதியின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூபாய் 36 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!
இதனிடையே, போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மாலை 06.00 மணிக்கு கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் ரன்வீர் சிங்கின் நடன நிகழ்ச்சியும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.