ஐபிஎல் கிரிக்கெட்: முதல் நாளிலேயே தோற்றுப்போன சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
தொடக்க வீரராக களமிறங்கிய டெவான் கான்வே ஒரு ரன்னில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடினார்.அடுத்து களமிறங்கிய மொயீன் அலி 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் , பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அடுத்து வந்த ஷிவம் துபேவும் பெரிதாக சோபிக்கவில்லை. நன்றாக ஆடி வந்த ருதுராஜ் கெய்க்வாட் 92 ரன்னில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.20 ஓவர் முடிவில் சென்னை 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது.
குஜராத் அணி வெற்றிபெற 179 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.சென்னை அணி ராயுடுக்கு பதில் தேஷ் பாண்டேவை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்துள்ளது.பவர் பிளேவான முதல் ஆறு ஓவர்களில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் சேர்த்தது.குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 30 பந்துகளில்,அவர் 36 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த விஜய் சங்கர் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.கடைசி ஓவரில் குஜராத் அணிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அடுத்தடுத்து சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி ராகுல் டிவாட்டியா அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.