
மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ் அணி.
முதல் பாடல் சூப்பர் ஹிட், இப்போ அடுத்தது… மாமன்னன் இரண்டாம் பாடல் ரிலீஸ் அப்டேட்!
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மே 26) இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி.
முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் ஷுப்மன் கில் 60 பந்துகளில் 129 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அதேபோல், சாய் சுதர்ஷன் 43 ரன்களையும், ஹர்தீக் பாண்டியா 28 ரன்களையும், சஹா 18 ரன்களையும், ரஷீத் கான் 5 ரன்களையும் எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து, விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
மும்பை அணி தரப்பில், சூர்யகுமார் யாதவ் 61 ரன்களையும், திலக் வர்மா 43 ரன்களையும், கேம்ரான் க்ரீன் 30 ரன்களையும் எடுத்துள்ளனர். குஜராத் அணி தரப்பில், மோஹித் சர்மா 5, ரஷீத் கான் மற்றும் முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
கவின் பட இயக்குனர் உடன் கூட்டணி அமைக்கும் துருவ் விக்ரம்!?
மும்பை அணியை வீழ்த்தியதன் மூலம் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளது. இரண்டாவது முறையாக குஜராத் அணி, ஐ.பி.எல். தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் நாளை (மே 28) இரவு 07.30 மணிக்கு நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன.