ஐ.பி.எல்.- 2024 கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் துபாயில் இன்று (டிச.19) காலை 10.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
புஷ்பா பட நடிகரை ஜாமீனில் எடுத்த படக்குழு… படப்பிடிப்புக்காக ரிஸ்க்….
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸை ரூபாய் 20.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைசஸ் ஹைதராபாத் அணி. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போனவர் என்ற பெருமையைப் பெற்றார் பேட் கம்மின்ஸ். இதற்கு முன் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், சாம் கரனை ரூபாய் 18.5 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்ததே அதிகமாக இருந்தது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ரூபாய் 1.80 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. அதேபோல், இந்திய வீரர் ஷர்துல் தாக்கூரை ரூபாய் 4 கோடிக்கு சென்னை அணி எடுத்துள்ளது.
‘நக்கலைட்ஸ்’ இயக்குநருடன் கைகோர்த்த நடிகர் மணிகண்டன்.. தொடங்கிய படப்பிடிப்பு!
இங்கிலாந்து அணி வீரர் கிறிஸ் வோக்சை ரூபாய் 4.20 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ். இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கே.எஸ்.பரத்தை அடிப்படை விலையான ரூபாய் 50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் அல்சாரி ஜோசப்பை ரூபாய் 11.5 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.