Homeசெய்திகள்விளையாட்டுஐபிஎல் 2025 ஏலம்: 6 இந்திய வீரர்களை வாங்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி

ஐபிஎல் 2025 ஏலம்: 6 இந்திய வீரர்களை வாங்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி

-

இந்தியன் பிரீமியர் லீக்கின் 2025 சீசனுக்கு முன்னதாக நடைபெறவுள்ள ஏலத்தில் ஏராளமான நட்சத்திர வீரர்கள் களமிறங்கியுள்ளனர். அவர்களில் 6 பந்துவீச்சாளர்களும் இடம்பிடித்துள்ளனர்.

16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்- பேட்டிங், பந்து வீச்சில் கலக்கிய வீரர்கள்!
Photo: IPL

ஐபிஎல் வரலாற்றில் மிக வெற்றிகரமான பந்துவீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் 160 போட்டிகளில் 205 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆச்சரியம் அளித்தவர். இத்தனை தகுதி வாய்ந்த வீரரை ராஜஸ்தான் ராயல்ஸ் விடுவிக்க முடிவு செய்தது. இதற்கு முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அற்புதமான ஆட்டங்களை விளையாடி உள்ளார். ஆர்சிபியும் அவரை விடுவித்ததுதான் ஆச்சரியமான விஷயம். இப்போது சதுர் சாஹலை எந்த அணி ஏலத்தில் எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் மிகவும் வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்ஷல் படேல் இரண்டு முறை நீல நிற தொப்பியை வென்றுள்ளார். கடந்த சீசனில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 24 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2021ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எந்த மைதானத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் கொண்டவர். இப்போது எந்த அணி அவரை ஏலம் எடுக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தார். ஐபிஎல் 2023- 2024 ல் அவரது ஆட்டம் எடுபடவில்லை. 80 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 117 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பஞ்சாப் அணிக்கு முன், அவர் டெல்லி அணியில் இருந்தார். அவர் 2020 ல் டெல்லிக்காக 30 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2011 -ல் புனே வாரியர்ஸ் அணிக்காக தனது ஐபிஎலில் அடியெடுத்து வைத்தவர் புவனேஷ்வர் குமார். 2014 முதல் 2024 வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வந்தார். அவர் அந்த அணிக்கு கேப்டனாகவும் இருந்தார். 2016- ல் அந்த அணி வெற்றிபெற முக்கிய பங்கு வகித்தார். புவனேஷ்குமார் 2016- 2017 ஆம் ஆண்டுகளில் முறையே 23 மற்றும் 26 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரை வாங்குவதில் அவரது பழைய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு காலத்தில் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்தவர் மோஹித் சர்மா. அவர் 2013 முதல் 2017 வரை ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடியவர். 2014-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நீல நிற தொப்பியையும் வென்றவர். இதற்குப் பிறகு அவரது வாழ்க்கை தடம் புரண்டது. அவர் 2019 -2020 ல் ஒரு போட்டியில் தலா ஒரு விக்கெட்டை எடுத்தார். 202- 2022 ல் அவர் எந்த அணியிலும் விளையாடவில்லை. ஆனால் ஆஷிஷ் நெஹ்ரா அவரை மீண்டும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கொண்டு வந்தார். அதன் பிறகு 2023ல் 27 விக்கெட்டுகளையும், 2024ல் 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இந்தியாவின் அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை விலையான ரூ.2 கோடியுடன் களமிறங்குகிறார். கடந்த சீசன் வரை குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஒரு அங்கமாக இருந்தார். இருப்பினும், 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடும் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் 2024 சீசனில் விளையாட முடியவில்லை.

MUST READ