Homeசெய்திகள்விளையாட்டுஐபிஎல் 2வது ஆட்டத்தில் களமிறங்கியது PBKS vs KKR

ஐபிஎல் 2வது ஆட்டத்தில் களமிறங்கியது PBKS vs KKR

-

ஐபிஎல் தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் மோதும் பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்.

16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி கோலாகலமாக நேற்று(31.03.2023) தொடங்கியது. முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஐபிஎல் 2வது ஆட்டத்தில் களமிறங்கியது PBKS vs KKR

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி முதல் லீக் ஆட்டம் பிந்த்ரா ஸ்டேடியம் மாலை 3.30 மணிக்கு ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.

பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பிரம்சிம்ரன் சிங் 23 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

ஐபிஎல் 2வது ஆட்டத்தில் களமிறங்கியது PBKS vs KKR

அடுத்ததாக பனுகா ராஜபக்சே களம் இறங்கினார். அதிரடியாக விளையாடிய ராஜபக்சே 30 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். அரைசதம் அடித்த நிலையில், பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 32 பந்தில் 50 ரன் எடுத்து அவுட் ஆனார்.

பின்னர் தவானுக்கு ஜோடியாக ஜித்தேஷ் ஷர்மா களமிறங்கினார். அதிரடியாக ஆடிய ஜித்தேஷ் ஷர்மா 11 பந்தில் 21 ரன் எடுத்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிகர் தவான் 40 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து ஜிம்பாப்வே ஆல்-ரவுண்டர் சிக்கந்தர் ராசா மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ராசா 16 ரன்னில் அவுட் ஆனார்.

ஐபிஎல் 2வது ஆட்டத்தில் களமிறங்கியது PBKS vs KKR

இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி ஆட உள்ளது.

MUST READ