ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து ஜெய்ஷ்வால் சாதனை படைத்துள்ளார்.
அன்பை விதைக்கும் படைப்பாக மட்டுமே உருவாக்கியுள்ளோம்… ‘இராவணக் கோட்டம்’ குறித்து படக்குழு!
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 56வது லீக் போட்டி நேற்று (மே 11) இரவு 07.30 மணிக்கு நடைபெற்றது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை எடுத்தது.
இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரராக ஜெய்ஷ்வால் அதிரடியில் மிரட்டினார். கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா வீசிய முதல் ஓவரில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 26 ரன்களை எடுத்தார்.
தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய ஜெய்ஷ்வால், கொல்கத்தா அணியினரின் பந்து வீச்சைத் துவம்சம் செய்து, 13 பந்துகளில் அரைச்சதத்தைப் பூர்த்திச் செய்தார். இதனால் ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து, ஜெய்ஷ்வால் சாதனை படைத்துள்ளார்.
எப்பா அந்தப் படத்த காப்பி அடிக்கல, நாளைக்கு உங்களுக்கே தெரியும்… தெளிவுபடுத்திய வெங்கட் பிரபு!
இதற்கு முன்பு கே.எல்.ராகுல் உள்ளிட்டோர் 14 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தனர். முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து, 151 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜெய்ஷ்வால் 49 பந்துகளில் 98 ரன்களும், சஞ்சு சாம்சன் 29 பந்துகளில் 48 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.