
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மே 28) நடைபெறவிருந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
“வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மே 28) இரவு 07.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த தயாராகின. இறுதிப் போட்டி தொடங்கும் முன்பாக, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மாலை 06.34 மணிக்கு ஆரம்பித்த மழை, இரவு 07.45 மணி வரை தொடர்ந்தது. டாஸ் போடுவதற்கு இரு அணிகளின் கேப்டன்களும் தயாரான நிலையில், மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. கனமழை கொட்டித் தீர்த்ததால் மைதானம் குளம் போல் மாறியது. இரவு 10.45 மணிக்கு மைதானத்தைப் பார்வையிட்ட நடுவர்கள் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தனர்.
இன்று விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி- எப்12 ராக்கெட்!
இதனால் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். ரிசர்வ் டே முறைப்படி இன்று இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. அகமதாபாத்தில் இன்று (மே 29) மழை பெய்ய 10% மட்டுமே வாய்ப்பிருப்பதாக, அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல். வரலாற்றில் முதல்முறையாக ரிசர்வ் டே முறைப்படி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.