Homeசெய்திகள்விளையாட்டுஇன்றும் மழை பெய்து போட்டி ரத்தானால் யாருக்கு கோப்பை?- விரிவான தகவல்!

இன்றும் மழை பெய்து போட்டி ரத்தானால் யாருக்கு கோப்பை?- விரிவான தகவல்!

-

- Advertisement -

 

இன்றும் மழை பெய்து போட்டி ரத்தானால் யாருக்கு கோப்பை?- விரிவான தகவல்!
Photo: IPL

16- வது ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி, இன்று (மே 29) மழையின் காரணமாக ரத்துச் செய்யப்பட்டால் விதிப்படி குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல். இறுதிப்போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். வரலாற்றில் முதல்முறையாக இறுதிப்போட்டி ரிஸர்வ் டே முறையில் நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியிலும் மழை குறுக்கிட்டு டாஸ் போடுவதற்கு தாமதம் ஏற்பட்டால், ஓவர் குறைக்கப்பட்டு போட்டி தொடங்கும்.

அதற்கும் வாய்ப்பு இல்லாத பட்சத்தில் லீக் சுற்றின் முடிவில், புள்ளிகள் பட்டியலில் அதிக புள்ளிகளைப் பெற்ற அணி, நடப்பு ஐ.பி.எல். தொடரின் சாம்பியனாக அறிவிக்கப்படும். அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஐ.பி.எல். கோப்பை கிடைக்கும். ஏனென்றால் குஜராத் டைட்டன்ஸ் அணி லீக் சுற்றின் முடிவில் 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது.

இன்று விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி- எப்12 ராக்கெட்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இது போன்ற சூழ்நிலை ஏற்படாமல், கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இறுதிப்போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மே 29) இரவு 07.30 மணிக்கு நடைபெறுகிறது.

MUST READ