
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் வெளியேறுதல் சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டாவது தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இன்று (மே 26) மோதுகிறது. இந்த போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 07.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தியாவின் பெரிய இயக்குனர் உடன் கூட்டணி அமைக்கும் ஜிவி பிரகாஷ்!
இரண்டாவது தகுதிச் சுற்று போட்டியில் வெற்றி பெற்று ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு செல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் பெறும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சொந்த மண்ணில் விளையாடும் குஜராத் டைட்டன்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வென்று இறுதிப்போட்டிக்கு செல்ல மல்லுக்கட்டும்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை வென்று இரண்டாவது முறையாக தகுதிச் சுற்றுக்கு முன்னேறி மும்பை இந்தியன்ஸ் அணியும் ஃபைனலுக்கு செல்ல போராடும். நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஐந்து முறை சாம்பியனாக இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதும் போட்டியில் பரபரப்பு பஞ்சம் இருக்காது.
தனுஷுடன் மீண்டும் இணையும் கேப்டன் மில்லர் பட நடிகர்!…
முதல் தகுதிச் சுற்றில் வென்று இறுதிப் போட்டிக்கு சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத போவது யார்? என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.