Homeசெய்திகள்விளையாட்டுஐபிஎல் டிக்கெட் விற்பனை - பெண்களுக்கு தனி வரிசை

ஐபிஎல் டிக்கெட் விற்பனை – பெண்களுக்கு தனி வரிசை

-

ஐபிஎல் டிக்கெட் விற்பனை – பெண்களுக்கு தனி வரிசை
சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே 30 ஆம் தேதி நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. இரவு முதலே ரசிகர்கள் காத்திருந்து ஆர்வத்துடன் டிக்கட்டுகளை வாங்கி சென்றனர்.

ஐபிஎல் டிக்கெட் விற்பனை - பெண்களுக்கு தனி வரிசை

சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே 30 ஆம் தேதி நடைபெறுகிற கூடிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக மிகவும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் ரசிகர்கள் வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கி சென்று கொண்டிருக்கின்றனர்.

30 ஆம் தேதி இந்த கிரிக்கெட் போட்டி என்பது நடைபெறக்கூடிய நிலையில இன்று தினம் காலை 9:30 மணிக்கு முதல் டிக்கெட் விற்பனை என்பது தொடங்கி நடைபெற்று வருகிறது.

1500 ரூபாய் 2000 ரூபாய் 2500 ரூபாய் ஆகிய டிக்கெட்டுகள் கவுண்டர்கள் வழியாக விற்பனை செய்யப்படுகின்றன. 3000 ரூபாய் மட்டும் 5000 ரூபாய் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. ‌

ஐபிஎல் டிக்கெட் விற்பனை - பெண்களுக்கு தனி வரிசை

ஆன்லைன் மூலமாக குறைந்த டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கக்கூடிய காரணத்தினாலும் அதிக விலையுள்ள டிக்கெட் விற்பனை செய்யப்படக்கூடிய காரணத்தினாலும் கவுண்டர்களில் டிக்கெட்டுகளை வாங்குவதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

டிக்கெட்டுகளை வாங்குவதற்காகவே நேற்று இரவு முதலே ரசிகர்கள் காத்திருந்து ஆர்வத்துடன் டிக்கட்டுகளை வாங்கி சென்றனர். இளம் வயதினர் முதல் முதியவர்கள் மற்றும் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் டிக்கெட்டுகளை வாங்குவதற்காக இந்த வரிசையில் வந்து காத்திருக்கின்றனர்.

அது மட்டுமில்லாமல் கடந்த வாரங்களில் ஒவ்வொரு முறையும் டிக்கெட் விற்பனை தொடங்கிய போதும் பெண்களுக்கு என தனி வரிசை வேண்டும் என்ற ஒரு கோரிக்கை இருந்து வந்தது.

ஐபிஎல் டிக்கெட் விற்பனை - பெண்களுக்கு தனி வரிசை

இந்நிலையில இம்முறை பெண்களுக்கான தனி வரிசை அமைக்கப்பட்டு டிக்கெட்டுகள் வினியோகம் செய்யப்படுகிறது. பெண்களுக்கான வரிசையிலும் ஏராளமான பெண்கள் டிக்கெட்டுகளை வாங்குவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இங்கு டிக்கெட் வாங்குவதற்கு வந்திருக்கக்கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கக்கூடிய காரணத்தினால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வரிசையில் சென்று டிக்கெட்டுகளை வாங்கிச் செல்லும் வகையில் காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

கவுண்டர்களில் டிக்கெட்டுகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே 30 ஆம் தேதி நடைபெறக்கூடிய இந்த கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை என்பது தொடங்கி விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

MUST READ