Homeசெய்திகள்விளையாட்டுவினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்தது சரியா? - அரசு புதிய விளக்கம்

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்தது சரியா? – அரசு புதிய விளக்கம்

-

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்தது சரியா ? - அரசு புதிய விளக்கம்பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் குறித்த மத்திய அரசின் புதிய விளக்கம்.

பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் 50 கிலோ ஃப்ரீஸ்டைல் அரையிறுதியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யுஸ்னெலிஸை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இந்நிலையில் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு வினேஷ் போகத்தின் எடையை பரிசோதித்தபோது அவர் 2 கிலோ கூடுதலாக இருப்பது தெரியவந்ததை அடுத்து இரவு முழுவதும் வினேஷ் போகத் ஸ்கிப்பிங், சைக்கிளிங் உள்ளிட்ட உடற்பயிற்சி மேற்கொண்டு 1.9 கிலோ எடை வரை குறைத்துள்ளார்.

வினேஷ் போகத் நீர்ச்சத்து குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதி

வினேஷ் போகத் தகுதி நீக்கத்திற்கு மத்திய அரசு புதிய விளக்கம் அளித்துள்ளது.

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்தது சரியா ? - அரசு புதிய விளக்கம்

ஒரே இரவில் விக்னேஷ் போகத் உடல் எடை அதிகரித்ததாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் சிங் கூறியுள்ளார். வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பாக, உலக மல்யுத்த சம்மேளனத்திடம் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி இந்தியன் ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர் பி.டி உஷாவிடம் பேசியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் வினேஷ் போகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்தது சரியா? - அரசு புதிய விளக்கம்

 

கடந்த இரண்டு நாட்களாக வினேஷ் போகத் உடல் எடை 50 கிலோவில் சரியாக இருந்ததாகவும் தெரிவித்த சஞ்சய் சிங் உடல் எடை அதிகரிப்புக்கான காரணத்தை போகத்தின் பயிற்சியாளரும், ஊட்டசத்து நிபுணரும் தான் கூற முடியும் என்றும் அவர் தகுதி நீக்கத்துக்கு எவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பது என்று ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

MUST READ