
இந்திய கிரிக்கெட் அணியின் ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து பயணிகளின் கனிவான கவனத்திற்கு!
முதல் டெஸ்ட் போட்டியின் போது, ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டதாகவும், கே.எல்.ராகுல் காலில் வலி ஏற்பட்டிருப்பதாகவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. இருவரின் உடல்நலத்தையும் மருத்துவக் குழு கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு சர்ஃப்ராஸ் கான், சவுரப் குமார், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா A அணியில் இடம் பெற்றிருந்த வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக சரண் செயின் அந்த அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
பிப்.01- ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்வு!
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, வரும் பிப்ரவரி 02- ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.