நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 61வது லீக் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (மே 14) இரவு 07.30 மணிக்கு நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொண்டது.
முதலமைச்சர் தேர்வு- மேலிட பார்வையாளர்களை நியமித்தது காங்கிரஸ்!
முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்களை எடுத்தது. அந்த அணி தரப்பில், சிவம் துபே 48 ரன்களையும், கான்வே 30 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 20 ரன்களையும் எடுத்துள்ளனர்.
கொல்கத்தா அணி தரப்பில் வைபவ் அரோரா, தாகூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும், சக்கரவர்த்தி, நரேன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. இதனால் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
சி.பி.ஐ. இயக்குநராக பிரவீன் சூட் நியமனம்!
கொல்கத்தா அணி தரப்பில், கேப்டன் நிதீஷ் ராணா 57 ரன்களையும், ரிங்கு சிங் 54 ரன்களையும் எடுத்துள்ளனர். சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.