Homeசெய்திகள்விளையாட்டுடெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

-

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 63 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 64வது லீக் போட்டி நடைபெறுகிறது. டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 64வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் 6 வெற்றி 7 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திலுள்ளது. லக்னோ அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 6 வெற்றி 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில 7வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 4 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் லக்னோ அணி 3 முறையும் டெல்லி அணி 1 முறையும் முறையும் வெற்றி பெற்றுள்ளன. டெல்லி அணியை பொறுத்தவரை ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளதால் இப்போட்டியில் எந்தவிதமாற்றமும் ஏற்படுத்தாது. அதே போல் லக்னோ அணி இந்தாட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திலுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து டெல்லி அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் பிராஸர் மெகர்க்கும் அபிஷேக் போரெலும் களமிறங்கவுள்ளனர்.

 

MUST READ