Homeசெய்திகள்விளையாட்டுடெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங்!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங்!

-

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 25 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், இன்று 26வது லீக் போட்டி நடைபெறுகிறது. லக்னோ மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள 26வது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோ அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 4 போட்டியில் 3 வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் ஒரு வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் லக்னோ அணி 3 வெற்றியை பெற்றுள்ளது. கடந்த போட்டியில் தோல்வியடைந்த டெல்லி அணியானது இந்த போட்டியில் வெற்றியை பெற கடுமையாக முயற்சிக்கும் என்பதால் இப்போட்டிக்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து டெல்லி அணி பந்துவீசவுள்ளது. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் குயிண்டன் டிகாக் களமிறங்கவுள்ளனர்.

MUST READ