
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மத்தீஷா பதிரானாவின் குடும்பத்தினரை மஹேந்திர சிங் தோனி சந்தித்துப் பேசினார்.
இரண்டாவது முறையாக மருத்துவமனையில் சத்யேந்திர ஜெயின் அனுமதி!
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மத்தீஷா பதிரானாவின் குடும்பத்தினரை அந்த அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனி சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள மத்தீஷாவின் சகோதரி, மத்தீஷா தன்னுடன் இருப்பதால், அவரை பற்றி கவலைக் கொள்ள வேண்டியதில்லை என தோனி தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது சகோதரர் சரியான இடத்தில் தான் இருக்கிறார் என்ற நம்பிக்கை தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.