Homeசெய்திகள்விளையாட்டுகொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

-

- Advertisement -

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 59 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்று 60வது லீக் போட்டி நடைபெறுகிறது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 60வது லீக் போட்டியில் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 8 வெற்றி 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் முதலாவது இடத்திலுள்ளது. மும்பை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 4 வெற்றி 8 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 33 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 20 முறையும் மும்பை அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 51வது லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக போட்டியில் தோல்வியை தழுவிய மும்பை அணி இப்போட்டியில் பதிலடி கொடுக்க முயற்சிக்கும். அதே சமயம் கொல்கத்தா அணி தங்களது வெற்றியை தொடர முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இப்போட்டி தொடங்குவதற்கு முன் மழை குறுக்கிட்டதால் 2 மணி நேரம் கழித்த பின்னர் டாஸ் போடப்பட்டது. இதன் காரணத்தினால் போட்டியானது 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து கொல்கத்தா அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரேனும் பில் சால்ட்டும் களமிறங்கவுள்ளனர்.

MUST READ