இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சமீபகாலமாவே உடற்தகுதி பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார். காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அவர் நீண்ட காலமாக மைதானத்தில் இருந்து விலகி இருந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அவருக்கு கணுக்கால் பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் இப்போது நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஷமி பந்தில் அடிபட்டார். பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது, முகமது ஷமியின் முதுகில் நேரடியாகா பந்தால் தாக்கப்பட்டார். வலியால் அவர் மிகுந்த வேதனைப்பட்டார்.
நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் முகமது ஷமிக்கு பந்து வீசினார். இந்த சம்பவம் இந்திய இன்னிங்ஸின் கடைசி ஓவரில் நடந்தது. டீப்பில் 5வது பந்தை ஆடிய ஷமி இரண்டு ரன்கள் எடுத்தார். இரண்டாவது ரன் எடுக்கும்போது சாண்ட்னர் மந்து வீசினார். ஷமி விக்கெட்டை காப்பாற்ற க்ரீஸில் ஓடிக்கொண்டு இருந்தார். அப்போது சாண்ட்னர் பந்தை நேராக அவரது முதுகில் அடித்தார். பந்து தாக்கியதால் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி மிகவும் சங்கடமானார். உடனடியாக பிசியோ தரப்பு ஓடோடி வந்து ஷமியைச் சோதித்தனர்.
முகமது ஷமி ஒரு வலது கை வேகப்பந்து வீச்சாளர். சாண்ட்னர் எறிந்த பந்து ஷமியின் முதுகின் மேல் வலது பக்கத்தில் தாக்கியது. சாண்ட்னர் வேண்டுமென்றே பந்தை ஷமியின் மீது அடித்தது போல் தோன்றியது. இந்தப் போட்டியில் இந்தியாவுக்காக முகமது ஷமி மட்டுமே வேகப்பந்து வீச்சாளராக உள்ளார். இந்திய அணி 4 முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களுடன் வந்துள்ளது. ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டராக உள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபியின் குரூப் ‘ஏ’ போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக முதலில் பேட்டிங் செய்ய அழைக்கப்பட்ட பின்னர் இந்தியா ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 79 ரன்களும், ஹர்திக் பாண்டியா 45 ரன்களும், அக்சர் படேல் 42 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணி சார்பாக மேட் ஹென்றி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி குரூப் ஏ-வில் முதலிடத்தில் இருக்கும். அந்த அணி, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும். இந்தப்போட்டியில் தோல்வியடையும் அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும்.