Homeசெய்திகள்விளையாட்டுபெங்களூரு அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி!

பெங்களூரு அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி!

-

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 24 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், நேற்று 25வது லீக் போட்டி நடைபெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள 25வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து பெங்களூரு அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பாப் டூ பிளஸ்சிஸ் 61 ரன்களிலும் விராட் கோலி 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய வில் ஜாக்ஸ் 8 ரன்னிலும் ரஜத் படிதார் 50 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அணியை 196 ரன்கள் கடக்க வைத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 196 ரன்கள் குவித்தது. மும்பை அணியில் பந்துவீச்சு தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷான் 69 ரன்னிலும் ரோகித் ஷர்மா 38 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிங்கிய ஹர்திக் பாண்ட்யா 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் அணியானது 15.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 199 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அணியின் ஆட்டநாயகனாக ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டார்.

MUST READ