Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்திய அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

இந்திய அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

-

திமுக குறித்த அதே தேதியில் அதிமுக - பாஜக! தேர்தல் பரபர!

டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 76 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய அக்‌ஷர் பட்டேல் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 176 ரன்கள் எடுத்தது. பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 169 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்த நிலையில், டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நம்முடைய அணி இரண்டாவது #T20 உலகக் கோப்பையை முழுமையான ஆதிக்கத்துடன் வென்றதற்காக கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது இந்திய அணி சவாலான சூழ்நிலைகளில் அசாத்திய திறமையை வெளிப்படுத்தி, முறியடிக்க முடியாத சாதனையுடன் முடித்தது. வாழ்த்துக்கள், இந்திய அணி என குறிப்பிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா இரண்டாவது முறையாக # T20 உலகக் கோப்பையை வென்றது. போட்டி முழுவதும் மகத்துவத்தை வெளிப்படுத்தியதற்காக ரோகித் மற்றும் #TeamIndia ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இறுதிப்போட்டியானது சிறந்த டெத் ஓவர் பந்துவீச்சைக் கண்டது, சூர்யகுமாரின் கேட்ச் அற்புதமானது. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள், என குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ