Homeசெய்திகள்விளையாட்டுமுகமது ஷமியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து..... இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!

முகமது ஷமியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து….. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!

-

 

முகமது ஷமியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து..... இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!
Photo: BCCI

நடப்பு உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி ஒருமுறை கூட தோல்வியே சந்திக்கவில்லை என்றாலும் கூட, நேற்றைய போட்டி வாழ்வா? சாவா? என்ற நிலையில் தான் இருந்தது.

மணிப்பூரைச் சேர்ந்த 4 அமைப்புகளுக்கு மத்திய அரசுத் தடை!

இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டுமென்றால், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். அவர்களை ஏமாற்றாமல் கடந்த 2019- ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி தோல்விக்கு பதிலடி கொடுத்த இந்திய அணி, நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

உலகக்கோப்பை நாக்அவுட் சுற்று என்ற பதற்றம் இல்லாமல் நியூசிலாந்து பந்து வீச்சை சிதறடித்தார் கேப்டன் ரோஹித் சர்மா. பவர் பிளேயில் ரோஹித்தைக் கட்டுப்படுத்த வந்த சான்ட்னர் பந்து வீச்சையும் விளாசி நெருக்கடிக்குள்ளாக்கினார். 9ஆவது ஓவரில் ஆட்டமிழந்த ரோஹித் சர்மா, 29 பந்துகளில் 47 ரன்கள் விளாசி தேவையான அடித்தளத்தை அணிக்கு அமைத்துக் கொடுத்தார்.

ஜம்மு- காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 37 பேர் உயிரிழப்பு!

அடுத்து வந்த விராட் கோலி, ஷுப்மன் கில்லுடன் இணைந்து ரன்ரேட்டை சராசரியாக 7-க்கு கீழே குறையாமல் பார்த்துக் கொண்டார். சுப்மன் கில் 79 ரன்கள் எடுத்திருந்த போது, தசைப்பிடிப்புக் காரணமாக ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். பின்னர், விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்து சிறந்த இன்னிங்ஸைக் கட்டமைத்தனர்.

நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களால், இவர்களுக்கு எந்த நெருக்கடியையும் கொடுக்க முடியவில்லை. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் 50ஆவது சதமடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவரது மண்ணிலேயே முறியடித்தார்.

அவரைத் தொடர்ந்து, ஸ்ரேயாஸ் ஐயரும் சதமடித்து 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 397 ரன்களைக் குவித்தது. 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, பவர்பிளேவில் பும்ரா, சிராஜின் பந்துவீச்சு பெரிதாக ஸ்விங் ஆகாததால் 6ஆவது ஓவரில் முகமது ஷமியைக் களமிறக்கப்பட்டார்.

சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் காலமானார்!

கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோரை அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தி இரட்டை அடி கொடுத்தார் முகமது ஷமி. ஜோடி சேர்ந்த வில்லியம்சன் – மிட்செல் ஆகியோர் அடுத்தடுத்து அரைசதம் அடித்து மிரட்டியதால் ஆட்டம் நியூசிலாந்து அணியின் கட்டுப்பாட்டுக்குள் செல்லத் தொடங்கியது.

பும்ரா வீசிய 21ஆவது ஓவரில் வில்லியம்சன் கொடுத்த எளிதான கேட்சை முகமது ஷமி வீணடித்த நிலையில், மேலும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. அடுத்து பந்தை கையில் எடுத்த முகமது ஷமி, 33ஆவது ஓவரில் வில்லியம்சன், லாதம் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணியின் நம்பிக்கையைத் தகர்த்தார்.

நியூசிலாந்து அணிக்கு கடைசி 10 ஓவர்களில் 132 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. எனினும், மிரட்டலாக பந்து வீசிய ஷமி, மிட்செல்லை வீழ்த்தினார். 49ஆவது ஓவரில் கடைசி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி, இந்தியாவின் வெற்றியை உறுதிச் செய்தார்.

ஜம்மு- காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 37 பேர் உயிரிழப்பு!

57 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை சாய்த்த முகமது ஷமி, ஆட்டநாயகன் விருதையும் தனதாக்கினார்.

கடந்த 2019- ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு பதிலடிக் கொடுத்த இந்திய அணி, கடந்த 2011- ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பிறகு இறுதியாட்டத்துக்கு முன்னேறியுள்ளது.

MUST READ