Homeசெய்திகள்விளையாட்டுமும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

-

 

மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!
Photo: IPL

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 69வது லீக் போட்டி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று (மே 21) பிற்பகல் 03.30 மணிக்கு நடைபெற்றது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொண்டது.

பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத்!

முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்தது. அந்த அணித் தரப்பில் அதிகபட்சமாக, விவ்ரன்ட் சர்மா 69 ரன்களையும், மயங்க் அகர்வால் 83 ரன்களையும் எடுத்துள்ளனர்.

மும்பை அணி தரப்பில் ஜோர்டன் 1 விக்கெட்டையும், ஆகாஷ் மாத்வாள் 4 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. குறிப்பாக, ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.

“சென்னையில் பிரபல தியேட்டரை விலைக்கு வாங்கிய நயன் – விக்கி தம்பதி”

மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக, க்ரீன் 100 ரன்களையும், ரோஹித் சர்மா 56 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 25 ரன்களையும் எடுத்துள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

MUST READ