
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
ஜெயம் ரவியின் ‘தனி ஒருவன் 2’ படத்தின் முக்கிய அறிவிப்பு!
ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 12 வீரர்கள் களம் கண்டனர். இதில் தனது முதல் வாய்ப்பில் பவுல் செய்த நீரஜ் சோப்ரா, இரண்டாவது வாய்ப்பில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, முதல் இடத்தைப் பிடித்தார்.
அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் வீரர் இரண்டாவது இடத்தையும், செக் குடியரசு வீரர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இந்த வெற்றியின் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் நீரஜ் சோப்ரா படைத்தார்.
மேலும், ஆசிய விளையாட்டு போட்டி, காமன்வெல்த் போட்டி, ஒலிம்பிக், டைமன் லீக், தற்போது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி என அனைத்து சர்வதேச போட்டிகளிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார் நீரஜ் சோப்ரா.
கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் குறித்த அறிவிப்பு!
தங்கம் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “அர்ப்பணிப்பு, ஆர்வத்தால் நீரஜ் சோப்ரா விளையாட்டு உலகின் அடையாளமாக திகழ்கிறார்” என புகழாரம் சூட்டியுள்ளார்.