Homeசெய்திகள்விளையாட்டுஒலிம்பிக் 3000 மீ. ஸ்டீபிள் சேஸ்... இறுதிப்போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சாப்ளே!

ஒலிம்பிக் 3000 மீ. ஸ்டீபிள் சேஸ்… இறுதிப்போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சாப்ளே!

-

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சாப்ளே இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. இப்போட்டித் தொடரில் நேற்று நடைபெற்ற ஆடவர்3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் இந்தியா சார்பில் அவினாஷ் சாப்லே பங்கேற்றார். இந்த போட்டியின் ஹீட் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட அவினாஷ் 8.15 நிமிடங்களில் பந்தய தூரத்தை எட்டி 5-வது இடத்தை பிடித்தார். இதனால் அவர் பதக்கத்திற்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மேலும், 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற சிறப்பையும் பெற்றார். இன்று நள்ளிரவு 1.30 மணி அளவில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

தங்கம் வென்று வரலாற்று சாதனையைப் படைத்த நீரஜ் சோப்ரா!
File Photo

இதனிடையே இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டி இன்று பிற்பகல் 3.20மணிக்கு நடைபெறுகிறது. இதில் தங்க மகன் நீரஜ் சோப்ரா பங்கேற்கிறார். இன்று இரவு நடைபெறும் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, ஜெர்மனி அணியுடன் மோதுகிறது.

MUST READ