பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் காலிறுதி சுற்றுக்கு இந்திய வீரர் லக்ஷயா சென் முன்னேறியுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென், சக நாட்டு வீரரான ஹெச்.எஸ்.பிரணாய் உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்ஷயா சென் 21-12, 21-6 என்ற செட் கணக்கில் பிரணாய்-ஐ தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் அவர் தரவரிசையில் 11வது இடத்தில் உள்ள சவ்தியன் சென் உடன் மோதுகிறார். இதுவரை 3 முறை சவ்தியன் சென்னுடன் மோதியுள்ள லக்சயா சென் அதில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நளைய போட்டியில் வென்று சரித்திரம் படைப்பாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதனிடையே, பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் – சிராக் இணை, மலேசியாவின் ஆரோன் சியா, சோக் இணையிடம் 21-13, 14-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.