Homeசெய்திகள்விளையாட்டுஒலிம்பிக் பேட்மிட்ண்டன் - வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் லக்சயா சென் தோல்வி

ஒலிம்பிக் பேட்மிட்ண்டன் – வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் லக்சயா சென் தோல்வி

-

பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிட்ண்டன் தொடரில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் லக்சயா சென் போராடி தோல்வி அடைந்தார்.

ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் தொடரில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், உலகின் 7-ஆம் நிலை வீரரான மலேசியாவின் லீ ஸி ஜியாவுடன் மோதினார். இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட லக்சயா சென், முதல் செட்டை 21-13 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார்.

பின்னர் சுதாரித்துக் கொண்டு ஆடிய மலேசிய வீரர் 2வது செட்டை 16-21 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினர். இதையடுத்து 3வது செட்டில் அபாரமாக செயல்பட்ட லீ ஸி ஜியா 21-11 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் 13-21, 21-16, 21-11 என்ற செட் கணக்கில் லக்சயா சென்னை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

MUST READ