Homeசெய்திகள்விளையாட்டுஒலிம்பிக் டென்னிஸ் - தங்கம் வெனறார் செர்பியாவின் ஜோகோவிச்

ஒலிம்பிக் டென்னிஸ் – தங்கம் வெனறார் செர்பியாவின் ஜோகோவிச்

-

பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீரர் அல்காரசை வீழ்த்தி ஜோகோவிச் தங்கப்பதக்கம் வென்றார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தரவரிசையில் 3-ஆம் இடத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டின் கார்லஸ் அல்காரஸ் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் இரு வீரர்களும் சரி சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டம் பரபரப்பாக நகர்ந்தது.

இந்த ஆட்டத்தில்  ஜோகோவிச் டை பிரேக்கர் வரை போராடி வெற்றி பெற்றார். அவர் 7-6 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 24 பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச் ஒலிம்பிக்கில் முதன்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்தார்.இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த கார்லஸ் அல்காரஸ் வெண்கல பதக்கம் வென்றார்.

 

MUST READ