Homeசெய்திகள்விளையாட்டுஒலிம்பிக் மல்யுத்தம் : காலிறுதியில் நிஷா தஹியா தோல்வி!

ஒலிம்பிக் மல்யுத்தம் : காலிறுதியில் நிஷா தஹியா தோல்வி!

-

பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 68 கிலோ எடைப்பிரிவு காலிறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை நிஷா தஹியா தோல்வி அடைந்தார்

பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 68 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை நிஷா தஹியா, வடகொரிய வீராங்கனை பாக் சோல் கம் உடன மோதினார். இந்த போட்டியில் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய தஹியா 8-1 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தார். பின்னர் கையில் காயம் ஏற்பட்டதால் வலியை பொறுத்துக் கொண்டு விளையாடினார்.

அப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வடகொரிய வீராங்கனை 10-8 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். போட்டியில் தொடக்கத்தில் முன்னிலை வகித்து காயத்தால் தோல்வியை தழுவியதால் தஹியா வேதனையில் கதறி அழுதார். முன்னதாக நடைபெற்ற காலிறுத்திக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் அவர் உக்ரைன் வீராங்கனையை தோற்கடித்தார்.

MUST READ