ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பே பாகிஸ்தான் சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. இந்திய அணி செல்லாததால் கோபமடைந்த பாகிஸ்தான், நிறைய நாடகங்களை உருவாக்கியது. போட்டியிலிருந்து விலகுவதாகவும், போட்டியை நடத்துவதை கைவிடுவதாகவும் அச்சுறுத்தி வந்தது.

ஆனால் இறுதியில் இந்தியா விரும்பியதே நடந்தது அவர்கள் ஹைஃப்ரிட் மாடலை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, தொடக்க விழாவில் இந்தியக் கொடியை ஏற்றாமல் சங்கடப்படுத்த முயன்றனர். ஐசிசி கண்டித்தபோது, மீண்டும் பாகிஸ்தான், இந்திய கொடியை ஏற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது போட்டியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் இந்தியா மீது பழி சுமத்த முயற்சிக்கிறது.
சாம்பியன்ஸ் டிராபியில் வீரர்கள், வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்ததாக வெளியான செய்திகளை பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் மறுத்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் அமைதியாகவும், திறமையாகவும் நடத்தி வருவதாக அவர் கூறினார்.
வெளிநாட்டு விருந்தினர்களைக் கடத்த பயங்கரவாதக் குழுக்கள் சதி செய்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த தகவல்களை மறுத்த அவர், ”பாகிஸ்தானில் விளையாட்டை அழிக்க இந்தியா மேற்கொண்ட முயற்சி. பாகிஸ்தானில் ஐ.சி.சி போட்டிகள் நடைபெறுவதை இந்தியாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.பாகிஸ்தான் போட்டியை பாதுகாப்பாக ஏற்பாடு செய்துள்ளது. இது பாகிஸ்தானுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என்றும் அவர் கூறினார்.
திங்களன்று, பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவு, 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு விருந்தினர்களைக் கடத்தும் சதித்திட்டம் குறித்து பாதுகாப்புப் படையினரை எச்சரித்திருந்தது. தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான், இஸ்லாமிய அரசு மற்றும் பலுசிஸ்தானை தளமாகக் கொண்ட பிற குழுக்கள் உட்பட பல பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
உளவுத்துறை எச்சரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, வீரர்கள் மற்றும் அவர்களுடன் வரும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் ரேஞ்சர்ஸ் மற்றும் உள்ளூர் காவல்துறை உள்ளிட்ட உயர் மட்ட பாதுகாப்பு குழுக்களை நிறுத்தியுள்ளதாக கூறியுள்ளது. இஸ்லாமிய அரசு கோரசன் மாகாணம், சீன மற்றும் அரபு குடிமக்களை குறிப்பாக குறிவைத்து பணய கைதிகளாக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டின.