பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதால் பதக்க வாய்ப்பினை பிரகாசமாகியுள்ளது
பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கித் தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்துடன் மோதியது. போட்டியின் 17வது நிமிடத்தில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரித் சிங் கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். நடப்பு ஒலிம்பிக் தொடரில் அவர் அடித்த 7-வது கோல் இதுவாகும். தொடர்ந்து போட்டியின் 22-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி பதில் கோல் அடித்து போட்டியை சமன் செய்தது.
பிரதான ஆட்ட நேர முடிவில் 2 அணிகளும் தலா 1 கோல் அடித்து சமநிலையில் இருந்ததால் போட்டியில் வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி 4க்கு 2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியதால் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வெல்ல வாய்ப்பு பிரகாசகியுள்ளது,