நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 46வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி.நேற்று (மே 03) இரவு 07.30 மணிக்கு மொஹாலியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக, லிவிங்ஸ்டோன் 82 ரன்களையும், ஜிதேஷ் சர்மா 49 ரன்களையும் எடுத்துள்ளனர். மும்பை அணி தரப்பில், சாவ்லா 2 விக்கெட்டையும், அர்ஷத் கான் ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.
215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ரன்களை எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியுள்ளது. மும்பை அணி தரப்பில் இஷான் கிஷன் 75 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 66 ரன்களையும் எடுத்துள்ளனர்.
தோல்வியிலும் சாதனை படைத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக, நான்கு போட்டிகளில் 200- க்கும் அதிகமான ரன்களை குவித்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.