Homeசெய்திகள்விளையாட்டுபஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி திரில் வெற்றி!

பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி திரில் வெற்றி!

-

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று தனது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 26 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், நேற்று 27வது லீக் போட்டி நடைபெற்றது. மொகாலியில் உள்ள மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 27வது லீக் போட்டியில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து பஞ்சாப் அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அதர்வா டைட் 15 ரன்னிலும் ஜானி பேர்ஸ்டோ 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 10 ரன்னிலும் சாம் கரண் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாவது களமிறங்கிய அஷிதோஷ் சர்மா 31 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 147 ரன்கள் எடுத்தது.

பின்னர் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யாஷ்வி ஜெய்ஸ்வால் 39 ரன்னிலும் தனுஷ் கோடியன் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 18 ரன்னிலும் ரியான் பராக் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர், கடைசி ஓவரில் அணிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது சிம்ரன் ஹெட்மயர் 2 சிக்ஸர் விளாசி அணியை வெற்றி பாதைக்கு வித்திட்டார். ஹெட்மயர் 10 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அணியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 152 ரன்கள் எடுத்து தனது 5வது வெற்றியை பதிவு செய்தது.

MUST READ