Homeசெய்திகள்விளையாட்டுமழை காரணமாக ஐ.பி.எல். இறுதிப் போட்டி நிறுத்தம்!

மழை காரணமாக ஐ.பி.எல். இறுதிப் போட்டி நிறுத்தம்!

-

- Advertisement -

 

மழை காரணமாக ஐ.பி.எல். இறுதிப் போட்டி நிறுத்தம்!
Photo: IPL

16- வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (மே 29) இரவு 07.30 மணிக்கு இசை நிகழ்சசி மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் வண்ணமயமாக நடந்தது.

இன்றும் மழை பெய்து போட்டி ரத்தானால் யாருக்கு கோப்பை?- விரிவான தகவல்!

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து, பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களை எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக, சாய் சுதர்சன் 96 ரன்களையும், சஹா 54 ரன்களையும், சுப்மன் கில் 39 ரன்களையும் எடுத்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில், தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும், மதீஷா பதிரானா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

ஜப்பான் நிறுவனங்களுடன் ரூபாய் 819 கோடிக்கு ஒப்பந்தம்!

இந்த நிலையில், போட்டிக்கு நடுவே மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி மீண்டும் தொடங்குவதில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றவுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் பேட்டிங் செய்தனர். மூன்று பந்துகளை எதிர்கொண்ட ருதுராஜ் கெய்க்வாட் 4 ரன்களை எடுத்தார். இன்னும் 211 ரன்களை சென்னை அணி எடுக்க வேண்டியிருந்த நிலையில், மீண்டும் மழை பெய்ததால், இறுதிப் போட்டி நிறுத்தப்பட்டது.

MUST READ