Homeசெய்திகள்விளையாட்டுபெங்களூரு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுச் செய்த சென்னை அணி!

பெங்களூரு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுச் செய்த சென்னை அணி!

-

 

பெங்களூரு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுச் செய்த சென்னை அணி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றதுடன், நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுச் செய்துள்ளது.

பெங்களூருக்கு எதிரான முதலாவது ஐபிஎல் போட்டியில், சென்னை அணி அபார வெற்றி!

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது.

முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்தது. அந்த அணி தரப்பில் டு பிளசிஸ் 35 ரன்களையும், அனுஜ் ராவத் 48 ரன்களையும், கார்த்திக் 38 ரன்களையும் எடுத்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கியது – டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்க்!

அதைத் தொடர்ந்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுகள் 176 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக சாஹர் 37 ரன்களையும், தேஷ்பாண்டே 47 ரன்களையும் எடுத்தனர்.

MUST READ