மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீது அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
“இலங்கையிலிருந்து இந்தியா சென்றது எப்படி?”-முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்-க்கு வந்த புதிய சோதனை!
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்திருக்கிறது. இதனால் ஹர்திக் பாண்டியா மீது மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்து வந்தது, கடந்த போட்டியின் போது ரசிகர்கள் நடந்துக் கொண்ட விதத்திலேயே தெரிய வந்தது.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமை மீது முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உடை மாற்றும் அறையில் கேப்டன் விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
“மோடியின் குடும்பம் ED, IT, CBI தான்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
இந்த நிலையில், அதிருப்தி அடைந்துள்ள ரோஹித் சர்மா, இந்த ஐ.பி.எல். தொடர் முடிந்த பிறகு அணியை விட்டு விலக முடிவுச் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.