குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
‘கோடைக்காலங்களில் சாமானிய மக்களுக்கே முன்னுரிமை’- திருப்பதி கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை எடுத்தது.
பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 13.4 ஓவரிலேயே 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் டு ப்ளெஸ்சி 64, விராட் கோலி 42, தினேஷ் கார்த்திக் 21 ரன்களை அடித்தனர். குஜராத் டைட்டன்ஸ் அணி ஷாரூக் கான் 37, டேவாட்டியா 35, டேவிட் மில்லர் 30, ரஷீத் கான் 18 ரன்களை எடுத்தனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளும் மோதுகின்றன.