Homeசெய்திகள்விளையாட்டுடெல்லி அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான் அணி!

டெல்லி அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான் அணி!

-

17வது ஐபிஎல் சீசனில் 9வது லீக் போட்டியில் டெல்லி அணியை 12 ரன்கள் வீழ்த்திய ராஜஸ்தான் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில், இன்று நடைபெறவுள்ள 9வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது இன்று 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை பொறுத்தவரை தனது தொடக்க லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியானது 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. இவ்விரு அணிகளும் இதுவரை 27 போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் அணி 14 முறையும், டெல்லி அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதலாவது பேட்டிங்க் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யாஷ்வி ஜெய்ஸ்வால் 5 ரன்னிலும் ஜாஸ் பட்லர் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அணியின் அதிகபட்சமாக ரியான் பராக் 84 ரன்கள் குவித்தார். இதனையடுத்து டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் 49 ரன்னிலும் மிட்செல் மார்ஷ் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரிக்கி புய் ரன் ஏதுமின்றியும் ரிஷப் பண்ட் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாவது களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அணியின் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 49 ரன்கள் எடுத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் 5 விக்கெட்ட இழந்து 173 ரன்கள் எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்டநாயகன் விருது ரியான் பராக்க்கு வழங்கப்பட்டது.

MUST READ