Homeசெய்திகள்விளையாட்டுராஜஸ்தான்VSகொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழைக் காரணமாக ரத்து!

ராஜஸ்தான்VSகொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழைக் காரணமாக ரத்து!

-

- Advertisement -

ராஜஸ்தான்VSகொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழைக் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 68 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. நேற்று 70வது லீக் போட்டி (அதாவது இரண்டாவது போட்டி) நடைபெறுகிறது. கவுகாத்தியில் உள்ள பர்சபாரா மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு மோத இருந்த 70வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் பலப்பரீட்சை மோத இருந்தன. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் 8 வெற்றி 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திலுள்ளது. கொல்கத்தா அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் 9 வெற்றி 4 தோல்வியுடன் (ஒரு ஆட்டம் முடிவில்லை) புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலுள்ளது.

இப்போட்டியானது இடைவிடாத மழையின் காரணமாக இவ்விரு அணிகளும் மோத இருந்த ஆட்டமானது டாஸ் போடாமலேயே ஆட்டமானது ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. லீக் சுற்றில் இரண்டாவது இடத்திலிருந்த ராஜஸ்தான் அணியானது ஒரு புள்ளிகள் கிடைத்ததன் மூலம் ரன்ரேட்டில் குறைவாக இருந்ததன் காரணமாக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதே சமயம் கொல்கத்தா அணியானது 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

MUST READ