17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று இரவு நடைபெறும் 70வது லீக் போட்டியில் ராஜஸ்தான்VSகொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 68 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இன்று 70வது லீக் போட்டி (அதாவது இரண்டாவது போட்டி) நடைபெறுகிறது. கவுகாத்தியில் உள்ள பர்சபாரா மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 70வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் 8 வெற்றி 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திலுள்ளது. கொல்கத்தா அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் 9 வெற்றி 4 தோல்வியுடன் (ஒரு ஆட்டம் முடிவில்லை) புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் 14 வெற்றியுடன் சமமாக வென்றுள்ளன. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ள அந்த அணியானது இப்போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பெற முயற்சிக்கும். அதே சமயம் கொல்கத்தா அணியானது தங்களது வெற்றியை தொடர முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.