பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பட்லரின் அபார சதத்தால் தனது நான்காவது வெற்றியை பதிவு செய்தது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெற்ற 19வது ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மற்றும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 30 போட்டிகளில் சந்தித்துள்ளன. இதில் ராஜஸ்தான் அணி 12 வெற்றியும் பெங்களூரு அணி 15 வெற்றியும் பெற்றுள்ளன. 3 போட்டிகள் முடிவில்லாமல் போனது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து பெங்களூரு அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க பாப் டூ பிளசிஸ் 44 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 1 ரன்னிலும் சவுரவ் சான் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக விராட் கோலி 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 183 ரன்கள் எடுத்தது. பின்னர் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யாஷ்வி ஜெய்ஸ்வால் ரன் ஏதுமின்றியும் ஜாஸ் பட்லர் 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அணியின் ஆட்டநாயகனாக ஜாஸ் பட்லர் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி தனது நான்காவது வெற்றியை பதிவு செய்தது.