பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 18 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 19வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில் கொல்கத்தா அணி 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 3 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னை அணி இரண்டு வெற்றி இரண்டு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. லக்னோ அணி இரண்டு வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
இன்று நடைபெறவுள்ள 19வது ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மற்றும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 30 போட்டிகளில் சந்தித்துள்ளன. இதில் ராஜஸ்தான் அணி 12 வெற்றியும் பெங்களூரு அணி 15 வெற்றியும் பெற்றுள்ளன. 3 போட்டிகள் முடிவில்லாமல் போனது
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து பெங்களூரு அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி பாப் டூ பிளசிஸ் களமிறங்கவுள்ளனர்.